Translate

புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூப வலிகள் !


கமலஹாசன் என்ற மனிதர்.,
சிறந்த கலைஞர் !
சிறந்த மனித நேயர் !
மதங்களுக்கு அப்பாற்பட்டவர் !
மிகவும் நல்ல மனிதப்பண்பாளர் !
சீர்திருத்த சிந்தனையாளர் !
ஊரறிந்த நாத்திகவாதி !
சமூக ஆர்வலர் !
மிகுந்த  அப்பாவி !  -இவையனைத்துமே முற்றிலும்  உண்மைதான் ! 

ஆனால்.,இத்தனை பெருமைகளையும் 
கமலஹாசன் உண்மையிலேயே காப்பாற்றும் எண்ணமுடையவரானால் ..
அவர் கண்டிப்பாக தம்மால் நிகழ்த்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிற அல்லது 
நிகழ்ந்துவிட்டதான  இழப்பிற்கு அவருடைய இயல்பான பெருந்தன்மையுடன்

குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளில் ஏற்பட்டுவிட்ட 
காயங்களுக்கு மருந்திடும்விதமாய்- நீதிமன்றமே  
தனக்குச் சாதகமான தீர்ப்பையே வழங்கியிருந்தாலும் கூட 
சம்பந்த்தப்பட்ட அந்த மதத்தின் முக்கியமானவர்களை 
மறுமுறையும்  அழைத்துச்சந்தித்து - கொஞ்சமேனும் வருத்தம் தெரிவித்து ,

இயலுமானவரை படத்தில் எதையாவது திருத்திக்கொள்ளவோ -நிறுத்திக்கொள்ளவோ 
முயற்சிக்கிறேன்..,என்று, ஒரு வார்த்தையையாவது கூறியிருப்பார்,-கூறியிருக்கவேண்டும்.
ஏனென்றால்..முஸ்லிம்களுக்கும் கமலுக்குமான உறவு  இத்தோடு முறிந்து போய்விடக்கூடியதல்ல!   

பொதுவாகவே  சினிமாக்காரர்களும் ,பொது ஜனங்களும் 
சில விசயங்களை கொஞ்சம் மனிதாபிமானத்தோட சிந்திக்கணும் !

ஒருவன்  நல்லவன் என்பதாலேயே..அவன்  கத்தியாலே வயிற்றிலேகுத்தினால் 
யாருக்கும் குடல்வெளியே வராது "!- என்கிற ,வாதத்தை 
தயவுசெய்து யாரும் -யாருக்காகவும் முன்னிறுத்தாதீர்கள் ! அடுத்து,

முதலாவதாக பிரச்சினையை ஏற்படுத்துபவன் யார் ?
இரண்டாவதாக பிரச்சினையை உண்டாக்குபவன்  யார் ?-என்பதை,
காழ்ப்புணர்ச்சியின்றியும் ,பாரபட்சமின்றியும் விசாரித்து நியாயம் சொல்லுங்கள் !

பொதுவாய்.,சினிமா என்பதும்  அவைசார்ந்த இன்னபிற படைப்புக்கள்  எதுவானாலும் 

அவையொன்றும்  வாழ்க்கையின் ஆதாரசுருதியுமல்ல ! சமுதாயத்தின் உயிர்மூச்சுமல்ல !


இவையெல்லாமே அவற்றை ஆக்குபவர்களை மட்டுமே 


அடையாளப்படுத்துகிறது- அவர்களை மட்டுமே ஆடம்பரமாய் வாழவைக்கிறது!என்பதே உண்மை!



தவிர., சினிமாவும்  ஒரு போதைப்பொருள் ,


சினிமாக்காரனும்  புகழ் போதையில் இருப்பவன்  - அல்லது  


போதையை தேடும் வெறியுடன் இருப்பவன் ! 



அந்த போதையானது  எனது மனம் கவர்ந்த பகுத்தறிவுவாதி?!


கமல் அவர்களுக்கு சற்று மிகுதியாகவே உண்டு!  இந்த போதையில்தான் 


முஸ்லிம்களின்  மீது  அவர் 


"மோடி"  இடித்து  வம்புக்குஇழுத்து விட்டார்! 



   சரியாய் சொல்வதானால்.., ஒரு அவசியமும் இல்லாத   "சினிமா"என்கிற  


 ஒன்றை அரசியல்வாதிகளும் -ஆட்சியாளர்களுமே  "அத்யாவசியத்தேவை"  எனும் 


அவலநிலைக்கு  தள்ளிவிட்டுவிட்டார்கள் !


இங்கே மதங்களுக்குள் எச்சில்துப்பாமல் வசூலை வாரிக்குவித்த 
வணிகரீதியானபடங்கள்எத்தனையோஉண்டு !என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது! . 


லாகிரி  வஸ்த்துக்களை விற்பவன்  "நான் அதிகமாக முதலீடுசெய்து வியாபாரம் துவங்கிவிட்டேன் ,

என் நிலைமையை யோசியுங்கள்  "என்றோ ,

நீங்கள் வேண்டுமானாலும் புகைத்துப்பாருங்கள் இதில் அப்படியொன்றும் போதை இருக்காது" என்றோ ,

அல்லது,  "பொதுமக்களிடம்  நானே நேரில்சென்று விற்கிறேன்  விரும்பியவர்கள் வாங்கட்டும் .,
விரும்பாதவர்கள்  போகட்டும் " என்றோ, ,விளக்கம் தந்தால் ஏற்றுக்கொள்வோமா ..?  

அப்படி  ஏற்றுக்கொள்வோமானால் .., அது 
அடுத்தவீட்டுக்காரரின் பிள்ளைகள்  நமதுபேச்சை தட்டாமல் கேட்கக்கூடியவர்கள்  என்பதற்காக 
பெற்றவர்களையே  பகைத்துக்கொள்ளும்படி அவர்களுக்கு பாடம் நடத்தக்கூடியதர்க்கு சமமில்லையா ?!

 யாராகயிருந்தாலும்  இங்கே எல்லைதாண்டுவதற்கு  சுதந்திரம் இல்லை ! 



ஏனென்றால்...ஒற்றுமையும் ,அமைதியும்,சந்தோசமும் அந்த எல்லைக்கோட்டில்தான் பரவிக்கிடக்கிறது !



 ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்கிறீர்களே..,

அந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையைவிட 

 மதவாதிகள் ஏற்படுத்தும் பிரச்சினை கடுமையானதாக இருக்குமே என்று- யோசிக்கவில்லையா ?!, அல்லது  



இந்தியாவில் முஸ்லிம்கள் மைனரிட்டிகள்தானே ..அவர்களால் என்ன செய்துவிடமுடியும்..என்ற, 

பரிட்சார்த்தமுயற்சியா.?



தயவுசெய்து நேற்றிருந்த அமைதி குலைந்துவிடாதபடி 

இன்றைய பொழுதை சீர்த்திருத்த முயற்சி மேற்கொள்ளுங்கள் ! 



சரி.., கமலஹாசன் எந்த முட்டாள்தனத்தை - எந்த மூடநம்பிக்கையை களைவதற்காக 


இப்படி முழுவீச்சில் களமிறங்கியிருக்கிறார் ?  

நாட்டில் அவங்கஅவங்க வேலை- சோலிகளை பார்த்துக்கிட்டு 

அல்லா  ன்னு  இருக்கிறமக்களைச்சீண்டி  நாட்டிலே இருக்கிற குழப்பமும் ,கலவரங்களும் போதாதென்று 


தனது  சுயஆதாயத்திற்கான  ஒரு தொழிலில்-வியாபாரத்தில்   பலகோடி ரூபாய்களை 


முதலீடுசெய்து ஏற்கெனவே இந்தியாவில்  பரிதாபத்திற்குரியவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிற 

ஒரு மைனாரிட்டி சமூகமாயுள்ள முஸ்லிம்மதத்தை ,அவர்களின் நம்பிக்கையை  
இவர் தாம்விரும்புகிற ஒரு கோணத்தில் மட்டும் மேலெழுந்தவாரியாக புரிந்துகொண்டும்
  
அதைப்படமெடுத்தும்  -பிறகு அதை மத்திய அரசு ஊழியர்கள் சிலரிடம் காண்பித்து 
அந்த படத்தை வியாபாரம் செய்வதற்கு ஒரு தடையில்லா சான்றிதழும்  பெற்றுகொண்டு  -
சந்தைக்கும்   வியாபாரம் செய்ய வந்திருக்கிறாரே..இதுதானா மனிதநேயம் ?!



இதற்குப்பெயர்தான் சீர்திருத்தசிந்தனையா ? இவர் நம்பிக்கையின்படி பார்த்தால்..


இனி எல்லா மதங்களும் ,எல்லா நம்பிக்கைகளும் தணிக்கைகுழுவிடம்  கண்டிப்பாக 

சான்றிதழ் பெறவேண்டுமென்றும் சினிமாக்காரர்கள் கூறுவார்கள் போலிருக்கிறது! .

இங்கே .,கமலஹாசன் ஆகட்டும் அல்லது வேறெந்த சினிமாக்காரர்களும் ஆகட்டும்-


இவர்கள் யாரும் தங்களைத்  தாமே ஒரு பெரிய அவதாரபுருசர்களாக கருதிக்கொள்வதை 


முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.கசாப்புக்கடை காரர்களை போல், சலூன் கடை காரர்களை ,


மளிகைகடைகாரர்களைப்  போல  இவர்களும் ஒரு வியாபாரிகள்தான் -பிழைப்புவாதிகள்தான்! 


இதைஅவர்கள் நினைவில்வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது!



எந்தெந்த மதங்களெல்லாம் சரியானமதங்கள்..? எந்தெந்தமதங்களையெல்லாம்  


தொடர்ந்து நாட்டிலேஇருக்க அனுமதிக்கலாம்..,-என்று ,சினிமாக்காரர்கள் படம் எடுத்து ..,


அதை இந்தியஅரசின்   தண்ணிக்கை குழு அதிகாரிகள்  தீர்மானித்துவிட்டால்..


குறிப்பிட்ட அந்தமதத்தை தேசவிரோதமதம் என்றும், அந்தமதத்தைசார்ந்து  இருந்தாலோ., 


அல்லது அந்தமதத்தை பற்றி உயர்வாய் பேசினாலோ ..

அவர்களை தேசப்பாதுகாப்புச்சட்டத்தில் கைதுசெய்து, மரணதண்டனையும் வழங்கிவிடலாமா ..?!  
தயவுசெய்து  இதுபோன்று கோணல்தனமாக சிந்திக்காதீர்கள் ! 



மதங்களை வரையறுப்பதும்  - வடிவமைப்பதும், அந்தந்த மதங்கள் சார்ந்த உரிமை என்பதை 


உணர்ந்து பேசுங்கள் -செயல்படுங்கள் ! அப்படியே மதங்களைகைதுசெய்யவோ, சிறையிடவோ- 


சிரசேதம்செய்யவோ தேவையிருந்தாலும்கூட அந்தவேலையை சட்டசபையும் -பாராளுமன்றமும் 


பார்த்துக்கொள்ளும். 



 நீங்கள் கணிசமாக காசுபார்ப்பதற்கு என்ன வழி என்பதை யோசித்து 


உங்க வியாபாரத்தை மட்டும் கண்ணும் கருத்துமா கவனித்துக்கொள்ளுங்கள் ..,பிற கவனம் வேண்டாம்.! 



ஐம்பது வயசு சினிமா ஆயிரத்து ஐநூறு வயதுடைய  மதத்தை வழிநடத்த ஆசைப்படுறது-  


உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா..?! அயிரைக்கு எதுக்கு விலாங்கு சேட்டை?



"எனக்கு பிறந்த நாள், எனவே நீ உன் நேரத்தை -வேலையை வீணடிப்பதுடன்-, 


நூறு ரூபாயையும்  செலவுசெய்து என் படம்  பார்! இதுதான் உனக்கு நான்தரும் பிறந்த நாள் பரிசு!" என  

மக்களை ஒருவகை போதைக்கு உட்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உறிஞ்சுபவர்கள் 

மதவாதிகளை சாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ? 



மதவாதிகளின் சொகுசுபிளான் ஒருசிறிய வட்டத்திற்குள் என்றால் -


உங்களின் சொகுசுக்கனவோ   உலகளாவியவட்டம்!. இதில் எங்கே இருக்கிறது சமூகப்பார்வை?  



தீவிரவாதம் என்கிறோமே ,அது என்ன ? 

ஒருவர் தமது கொள்கையிலே சற்று கூடுதலான பற்று வைப்பதற்கு பெயர் தீவிரவாதம் !

சரி.,எந்தக்கொள்கையிலே தீவிரமாக இருக்கிறார்கள் ? 

கடவுள் -மதம் சார்ந்த கொள்கையிலே தீவிரமாக இருக்கிறார்கள்! 



சரி.,கடவுள் -மதம் என்பது என்ன ?   அவையெல்லாமே நம்பிக்கைசார்ந்த விசயம்தான்  ! 

சரி.,நம்பிக்கை  என்பது என்ன ? அது முட்டாள்தனங்களின் முழுஉருவம் ! 



சரி..,அவை என்ன.,என்ன ? கருவறை துவங்கி கல்லரை வரையிலும் 

முட்டாள்தனங்கள்தான்  வாழ்க்கையை முன் நிறுத்துகிறது !



செத்துப்போய்  மண்ணுக்குள் புதைந்து போனவன் 

கல்லுக்கு வந்து காட்சிதருகிறானே..அது முட்டாள்தனம்தான் ! 

அந்த கல்லுக்கு அணி அணிஅணியாய்  சென்று 

அஞ்சலி செய்கிறோமே அது முட்டாள்தனம்தான்  !



செத்துப்போனவனை அடக்கமாக அடக்கம் செய்யாமல் 

தீயிட்டுக்கொளுத்தி சுற்றுப்புறத்தையும் -சுவாசிக்கும் காற்றையும்  
மாசுபடுத்துகிறோமே..,அது முட்டாள்தனம்தான் ! 



செத்துப்போனபிறகும் தனக்கென ஒருதனிவீடு(சமாதி)வேண்டுமென்று கட்டச்சொல்லி 


கட்டையில் போகிறானே..,அது முட்டாள்தனம்தான் !  



இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்..,

ஆக, மையத்தில் நின்று மதிமயங்காமல்  சிந்தித்துப்பார்த்தால் 

கடவுள் ,கற்பு,அறிவு,ஆரூடம்..  என,எல்லாமே நம்பிக்கை சார்ந்ததுதான் ! 

நம்பிக்கைசார்ந்த எல்லாமே முட்டாள்தனங்கள்தான்!



நெற்றியிலே குங்குமம் முட்டாள்தனம்! தலையிலே குல்லா முட்டாள்தனம்!  


நிசப்தத்தில் மனதோடு மனதாக சந்திக்கவேண்டிய இறைவனை - 


ஒப்பாரியோடும்  ,கும்மாளத்தோடும்  கூக்குரலிட்டு கூப்பிடுவது முட்டாள்தனம்! ,


தாலி முட்டாள்தனம் , தாயத்துமுட்டாள்தனம் , மதங்கள் முட்டாள்தனம் , 

கடவுள்கள் முட்டாள்தனம், பண்டிகைகள் முட்டாள்தனம்! 



,இன்னும் சொல்லப்போனால் 


தேசக்கொடிக்கு சல்யூட்அடிக்கிறோமே அதுகூட மனம்சார்ந்த -

நம்பிக்கைசார்ந்த ஒரு சடங்குதானேதவிர, அறிவுசார்ந்த அணுகுமுறையல்ல !  



மொத்தத்தில் "மூடும் பழக்கமும் மனம் சார்ந்ததுதான்..-

நம்பிக்கை சார்ந்ததுதான்..,முட்டாள்தனமானதுதான்"! 



இவற்றில் எதை கமலஹாசன் விட்டொழித்து வெற்றிக்கொடிநாட்டப்போகிறார் ?! 


கமலஹாசனும் ,அவருக்காக  வக்காலத்துவாங்கும் 

ஞாநி சூன்யங்களும் இதற்கு பதில் சொல்லட்டும்!

.


(சினிமா தோன்றியதற்கு முன்பிருந்த ஜாதிமதப்பிரிவுகளின்  எண்ணிக்கையையும் ,

அதற்கு பிறகு காணும் ஜாதி மதபிரிவுகளின் எண்ணிக்கையையும், 
இன்னும் .,கண்ணில் பட்ட இடத்திலெல்லாம் கடைவிரித்திருக்கும் 
கடவுள் கூட்டங்களின் எண்ணிக்கையையும்.,   இந்த சினிமா மற்றும் சினிமா சார்ந்த 
கூத்தரசர்கள்  மட்டுமல்ல!.,
தயவுசெய்து பொது  மக்களும் கொஞ்சம்கூர்ந்துகவனித்து  சிந்திப்பார்களாக!  )  


  


வேலைமெனெக்கெட்ட விஸ்வரூபத்திற்கும் ..


வெட்டித்தனமான சினிமாக்காரர்களுக்கும்  சில  யோசனைகள் ..!


-------------------------------------------------------------------------------------------------------------

சினிமாவை சினிமா என்ற கண்ணோட்டத்தில் மட்டும் படமெடுங்கள் ,

அளவுக்குமீறிமுயற்சிசெய்து  யதார்த்தத்தை கொண்டுவருகிறேன் பேர்வழி என்று  


எக்கச்சக்கமான சிக்கல்களுக்கு நீங்களும் உள்ளாகாதீர்கள்! 

மற்றவர்களையும் சங்கடப்படுத்தாதீர்கள் !



ஒரு தனிநபருடைய இடங்களை அல்லது பொருட்களை படம்பிடிப்பதற்கு 


அந்த உரிமையாளரிடம் அனுமதி பெறுவது போல 


மதங்களை மையப்படுத்திதான் நீங்கள் படம் எடுக்கபோகிறீர்கள் என்பது 

உறுதியாகிவிட்டபிறகு 
அந்த மதத்தை சார்ந்த மதகுருக்களை யாரையாவது  சந்தித்து 
கதைசொல்லி அல்லது கதைகேட்டு 


ஐயமின்றி-அச்சமின்றி தகவல்களை  சேகரித்தபின்பு காட்சிபடுத்துங்கள் ! அல்லது 


அரசாங்கமே தணிக்கைக்குழுவில் மதம்சார்ந்தவிசயத்தை 
முற்றிலுமாக அறிந்த அந்தந்தமதகுருக்களையும் 


அந்தந்தமதங்களின்சார்பாக நியமனம்செய்யட்டும் !



                                                                      --மக்கட்டி தவசிகுலன் ---.

                                                                    babamubeen@gmail.com